search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவி-தாட்கோ தலைவர் மதிவாணன் வழங்கினார்
    X

    நலத்திட்ட உதவிகளை தாட்கோ தலைவர் மதிவாணன் வழங்கினார். அருகில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.

    திருவாரூரில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவி-தாட்கோ தலைவர் மதிவாணன் வழங்கினார்

    • 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது.
    • தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழக தலைவர் மதிவாணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி த்தலைவ ர்பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் கீழ் 41 பயனாளிகளுக்கு தொழில் தொடங்கிட ரூ.251.86 லட்சம் மொத்த தொகையில், ரூ.72.62 லட்சம் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தற்காலிக மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கலியபெருமாள், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×