என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி மாதத் தவணை கட்டாத நபருக்கு வங்கி ஊழியர்கள் கொலை மிரட்டல் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி மாதத் தவணை கட்டாத நபருக்கு வங்கி ஊழியர்கள் கொலை மிரட்டல்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/09/1743466-kolaimirattal3.jpg)
X
வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி மாதத் தவணை கட்டாத நபருக்கு வங்கி ஊழியர்கள் கொலை மிரட்டல்
By
மாலை மலர்9 Aug 2022 1:44 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி மாதத் தவணை கட்டாத நபருக்கு வங்கி ஊழியர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
- பணம் கட்ட வேண்டும் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் சேர்ந்தவர் கருணாமூர்த்தி (வயது 47).இவர் தனியார் வங்கியில் 2 லட்சத்து 10 ஆயிரம் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக லோன் வாங்கியதற்கு மாத தவணை கட்டவில்லை. இதன் காரணமாக வங்கி ஊழியர்கள் கருணாமூர்த்தி வீட்டிற்கு நேரில் சென்று பணம் கட்ட வேண்டும் என கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் கருணா மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வங்கி ஊழியர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X