search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்லைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு
    X

    கோவை தமிழ்நாடு வேளாண் பல்லைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு

    • 5361 இடங்களை நிரப்புவதற்கு இணையதள விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
    • விழுப்புரத்தை சேர்ந்த திவ்யா என்பவர் முதலிடம் பிடித்தார்

    வடவள்ளி,

    கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ–கத்திற்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும், ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    5361 இடங்களை நிரப்புவதற்கு இணையதள விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இளம் அறிவியல் மாணவர்கள் சேர்க்கைக்கு மொத்தம் 41,434 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அதில் 36612 பேர் தர வரிசைக்கு தகுதி பெற்றனர். அதில் பெண்கள் 21, 384, ஆண் 12,333 பேர் விண்ணப்பித்தனர்.

    அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7½ சதவீத இட ஒதுக்கீட்டில் 10,887 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசாங்க பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் இ.எம்.ஐ எண்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் சரிபார்கக்ப்ப்டு உள்ளது.

    தமிழ் வழியில் பயில 9997 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரர்கள் இட ஒதுக்கீட்டில் 309 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு மொத்தம் 5 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு இந்த கல்வியாண்டில் 128 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 790 விண்ண ப்பங்கள் பெறப்பட்டு அவர்கள் 20 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தொழில்முறை கல்வி பயின்ற மாணவர்களுக்கு 5 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டு 242 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    இந்த நிலையில் இன்று கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கீதாலட்சுமி இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

    இதில், முதல் இடத்தை விழுப்புரத்தை சேர்ந்த திவ்யாவும், 2-ம் இடத்தை மதுரையை சேர்ந்த ஸ்ரீராம், 3-ம் இடத்தை தென்காசியை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் பிடித்துள்ளனர்.

    முன்னாள் ராணுவ வீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதம் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது.

    தகுதியானவர்கள் இந்த மாத கடைசி வாரத்தில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். இணைய வழி கலந்தாய்வு மற்றும் பொது இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரி பார்ப்பு ஜூலை முதல் வாரத்தில் இருந்து துவங்க உள்ளது.

    Next Story
    ×