என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 15-வது மாவட்ட பேரவை கூட்டம்
- கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும்.
- காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர், நவ.24-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 15-வது மாவட்ட பேரவை கூட்டம் இன்று தஞ்சை இந்திரா நகரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்வாணன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட இணை செயலாளர் அறிவழகன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் அம்சராஜ் தொடக்க உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் ரெங்கசாமி வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் வரவு செலவு அறிக்கையும், மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் செல்வி மகளிர் அறிக்கையும் தாக்கல் செய்து பேசினர்.
மாநில செயலாளர் கோதண்டபாணி சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட இணை செயலாளர்கள் மகேஷ், செந்தில்குமார், தமிழ்வாணன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர் .
இந்த பேரவை கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் , சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
பள்ளி சத்துணவு மையங்களில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி உணவை அந்தத் துறையில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்கள் மூலமாகவே சமைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலை பணியாளர்களில் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
கொரோனா காலத்தில் முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை திரும்ப வழங்கிட வேண்டும், கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் முன்னாள் மாநில செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கம் கோட்டத் தலைவர் செல்வராசு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் ஹேமலதா, மாவட்ட துணை தலைவர் முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்