என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
தமிழக கவர்னர் ரவி படம் அவமதிப்புவாழப்பாடியில் பா.ஜ.க.வினர் சாலை மறியல்
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, திரா விட மாடல் என்பது காலா வதியான கொள்கை என கருத்து தெரிவித்திருந்தார்.
- தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
வாழப்பாடி:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, திரா விட மாடல் என்பது காலா வதியான கொள்கை என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில், காவல்துறை உதவி மையம் முன்பாக நேற்று மதியம் திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி படத்தை வைத்து செருப்பு மாலை அணி விக்கப்பட்டு அவமதிப்பு செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், உடனடியாக அந்தப் படத்தை அப்புறப்ப டுத்தினர். மேலும் இதுகு றித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆளுநர் ரவியின் படம் அவமதிக்கப் பட்டது. குறித்து அறிந்து, சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் சண்முகநாதன் தலைமை யில், வாழப்பாடி பஸ் நிலையம் அருகே நேற்று மாலை பா.ஜ.க.வினர் திரண்டனர்.
ஆளுநர் படம் அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த செயலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வா கியை கைது செய்ய வலியு றுத்தியும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார், ஆளுநர் படத்தை அவம திப்பு செய்த நபர் மீது நட வடிக்கை எடுப்பதாகக்கூறி பா.ஜ.க.வினரை சமாதானம் செய்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






