search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்த 35 கடைகளுக்கு சீல்
    X

    பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்த 35 கடைகளுக்கு 'சீல்'

    • கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிர்வாகத்திற்கு கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் மெத்தனமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • கோவில் நிர்வாகத்தினர் திருப்போரூர் போலீசார் அதிரடியாக 35 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    திருப்போரூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலை, பஸ்நிலையம் அருகே பழைய மாமல்லபுரம் சாலை, இள்ளலூர் செல்லும் சாலைகளில உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிர்வாகத்திற்கு கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் மெத்தனமாக செயல்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதிதாசன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், கோவில் நிர்வாகத்தினர் திருப்போரூர் போலீசார் அதிரடியாக 35 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

    இதனால் கடைக்காரர்களுக்கும் கோவில் நிர்வாகத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொரு கடைக்காரரும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கோவில் நிர்வாகத்திற்கு வாடகை செலுத்தாமல் கடந்த 15 ஆண்டுகளாக மெத்தனமாக செயல்பட்டு வந்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகம் வாடகை பாக்கி செலுத்த சொல்லி பலமுறை எச்சரித்தும் செவி சாய்க்காத நிலையில் நேற்று அதிரடியாக கடைகளை பூட்டி சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    Next Story
    ×