என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பொன்னேரி பாரதி நர்சரி பிரைமரி பள்ளியின் 35 ஆம் ஆண்டு விழா பொன்னேரி பாரதி நர்சரி பிரைமரி பள்ளியின் 35 ஆம் ஆண்டு விழா](https://media.maalaimalar.com/h-upload/2023/04/04/1860714-tiruschool.webp)
X
பொன்னேரி பாரதி நர்சரி பிரைமரி பள்ளியின் 35 ஆம் ஆண்டு விழா
By
மாலை மலர்4 April 2023 4:14 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பள்ளியின் 35 வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
- முன்னதாக பள்ளி மாணவர்களின் நாட்டியம், நாடகம், யோகா, கவிதை, நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த சின்னகாவனம் பாரதி நர்சரி பிரைமரி பள்ளியின் 35 வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா பொன்னேரி தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் பொன் தாமோதரன், பொன்னேரி நகர வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னதாக பள்ளி மாணவர்களின் நாட்டியம், நாடகம், யோகா, கவிதை, நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X