என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை அருகே வியாபாரத்துக்கு வந்த அண்ணன்-தம்பி படுகொலை
- கடந்த 14-ந் தேதி மது அருந்திய போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மணிகண்டனையும், அவருடன் இருந்த அவரது தம்பி சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
- கைதான சதீஷ்குமார், பார்த்திபன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
நெல்லை:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் மணிகண்டன் ( வயது 25). இவர் லோடு ஆட்டோவில் ஊர், ஊராக சென்று வெங்காயம் விற்பனை செய்து வந்தார்.
ஒவ்வொரு ஊருக்கும் மொத்தமாக வெங்காயம் ஏற்றிச்சென்று சாலை ஓரங்களில் தற்காலிக கடை அமைத்து விற்பனை செய்வது வழக்கம். கடந்த 1-ந்தேதி நெல்லை மாவட்டத்திற்கு வெங்காயம் விற்பனை செய்வதற்காக மணிகண்டன் வந்துள்ளார்.
அப்போது தனது தம்பி சபரீஸ்வரன் ( 13) என்பவரையும் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு நெல்லைக்கு வந்துள்ளார். இங்கு நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் முக்கூடல் சாலையில் வெங்காய விற்பனைக்காக தற்காலிக கடை அமைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
மணிகண்டன், சபரீஸ்வரன் ஆகிய இருவரும் தினமும் தனது தந்தையுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளனர். கடந்த 13-ந்தேதி முதல் அவர்களிடம் இருந்து நாகராஜனுக்கு அழைப்பு வரவில்லை. நாகராஜன் தனது மகனுக்கு பலமுறை போன் செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் 15-ந் தேதி நெல்லைக்கு வந்து சுத்தமல்லி பகுதியில் மகன்கள் 2 பேரையும் தேடி பார்த்துள்ளார். அப்போது கொண்டாநகரத்திலிருந்து திருப்பணிகரிசல்குளம் செல்லும் சாலையில் அவர்களது லோடு ஆட்டோ நின்றுள்ளது. ஆனால் மகன்கள் இருவரையும் காணவில்லை.
பின்னர் அந்த பகுதியில் நாகராஜன் தேடிப்பார்த்துள்ளார். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நாகராஜன் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தார்.
இந்நிலையில் அவர்களது லோடு ஆட்டோ நின்ற இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சற்று தொலைவில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது.
போலீசார் அந்த கட்டிடத்திற்கு சென்ற போது அங்கு மணிகண்டன் உடல் பாதி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே தலை இல்லாமல் மற்றொரு உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்தது.
போலீசாரின் விசாரணையில் அந்த உடல் மணிகண்டனின் தம்பி சபரீஸ்வரன் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சபரீஸ்வரன் தலையை தேடி கண்டு பிடித்தனர்.
பின்னர் 2 பேரின் உடலையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக இன்று அதிகாலை அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடந்த போலீஸ் விசாரணையில் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வந்த சுத்தமல்லி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த சுப்பையா என்பவரது மகன்களான சதீஷ்குமார் ( வயது 23), பார்த்திபன்( வயது 22) ஆகியோர் சிக்கினர்.
இவர்கள் கடந்த சில நாட்களாக மணிகண்டனுடன் சேர்ந்து மது அருந்தி வந்தது தெரிய வந்தது. கடந்த 14-ந் தேதி மது அருந்திய போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மணிகண்டனையும், அவருடன் இருந்த அவரது தம்பி சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து சதீஷ்குமார், பார்த்திபன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான சதீஷ்குமார், பார்த்திபன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சம்பவத்தன்று மணிகண்டன், சதீஷ்குமார், பார்த்திபன் ஆகிய 3 பேரும் பாழடைந்த கட்டிடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகறாறு ஏற்பட்டது. உடனே மணிகண்டனை மற்ற இருவரும் தாக்கியுள்ளனர். மேலும் அவரது கை, கால்களை கட்டி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். வெகு நேரம் ஆகியும் தனது அண்ணனை காணாததால் சபரீஸ்வரன் அங்கு சென்று தேடி பார்த்துள்ளார். அப்போது மணிகண்டன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சதீஷ்குமாரிடம் கேட்டுள்ளார்.
இதனால் சகோதரர்கள் 2 பேரும் சேர்ந்து சபரீஸ்வரனையும் கழுத்தை நெரித்து கொலை செய்து கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளனர். எனினும் போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி சதீஷ்குமார், பார்த்திபன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மது போதையில்தான் 2 பேரும் சேர்ந்து அண்ணன், தம்பியை கொலை செய்தார்களா? அல்லது ஓரின சேர்க்கை விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மணிகண்டன் உடலின் அருகே கிடந்த சபரீஸ்வரன் உடலில் தலை இல்லாமல் இருந்தது. போலீசார் நள்ளிரவு நேரத்திலும் அங்குள்ள பாழடைந்த கட்டிடங்கள், புதர்கள் ஆகியவற்றில் சபரீஸ்வரனின் தலையை தேடி பார்த்தனர். நள்ளிரவு முதல் அதிகாலை 3 மணி வரையிலும் சுமார் 3 மணி நேரம் போலீசார் இடைவிடாது தேடி தலையை கண்டு பிடித்தனர்.
2 பேரும் கை,கால்கள் கட்டப்பட்டு 3 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒதுக்குபுறமான இடம் என்பதால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. அந்த வழியாக சென்ற நாய்கள் சபரீஸ்வரனின் தலையை கடித்து கொண்டு சென்று புதரில் போட்டிருக்கலாம் என்று போலீசார் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்