என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி 2 பேர் பலி
    X

    செங்கல்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி 2 பேர் பலி

    • மோட்டார் சைக்கிளில் இருந்த ரமேஷ், தம்பிரான் ஆகிய 2பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரை வரை தேடி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர், மசூதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது45). இறைச்சி கடை வைத்து உள்ளார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த தம்பிரான் (61) என்பவர் வேலைபார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தனர். செங்கல்பட்டு அருேக பழவேலி வந்போது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரமேஷ், தம்பிரான் ஆகிய 2பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தம்பிரானை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பிரானும் இறந்து போனார்.

    விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரை வரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×