என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டத்தின் கீழ் மறைமலை நகர் நகராட்சி பகுதிகளில் தூய்மைப்பணி
- ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
- நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.
செங்கல்பட்டு:
மறைமலைநகர் நகராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நகராட்சி முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டு துப்புரவு பணி நடந்து வருகிறது.
திடக்கழிவுகளை பிரித்து சேகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 6 நீர்நிலைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு சுமார் 1026 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.
கட்டிட இடிபாடுகள் 160 டன் அகற்றப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியில் அன்றாடம் திடக்கழிவுகளை உரிய முறையில் பிரித்தளித்த இல்லத்தரசிகள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் மறைமலை நகராட்சி பகுதியில் இன்று சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணிகள் நிகழ்ச்சியில் பொது மக்கள், வணிக நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்