search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை ரெயில் நிலையத்தில் சென்னை பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி
    X

    மதுரை ரெயில் நிலையத்தில் சென்னை பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி

    • 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் அபிநந்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனை செய்தனர். இதில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.
    • அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    மதுரை:

    சென்னை வில்லிவாக்கம் லட்சுமிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் அபிநந்தனா(வயது15). 10-ம் வகுப்பு மாணவி. கூடைப் பந்து வீராங்கனையான அபிநந்தனா விருதுநகரில் நடந்த கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக கடந்த 15-ந் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயிலில் விருதுநகர் வந்துள்ளார்.

    அவருடன் பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வந்துள்ளனர். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த போதிலும் முழுமையாக குணமடையவில்லை.மேலும் அவரால் விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்ற முடியவில்லை. இந்த நிலையில் விருதுநகரில் நடைபெற்ற போட்டிகள் முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அவர் 4 பயிற்சியாளர்கள் மற்றும் 24 மாணவ-மாணவிகளுடன் விருதுநகரில் இருந்து திருமங்கலத்திற்கு இன்று பஸ்சில் வந்துள்ளார். பின்னர் திருமங்கலத்தில் இருந்து பஸ்சில் மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகளுடன் மதுரை ரெயில் நிலையத்திற்கு அபிநந்தனா சென்றார்.

    அவர்கள் சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்தனர். அப்போது அபிநந்தனா திடீரென மயங்கி விழுந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சு மருத்துவ குழுவினர் அபிநந்தனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக பரிசோதனை செய்தனர்.

    இதில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×