என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு- நெல்லையில் குஜராத் அமைச்சர் பேட்டி
- குஜராத் மாநில அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
- பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
நெல்லை:
குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து சவுராஷ்டிரா தமிழ்சங்கம் விழாவை கடந்த 17- ந்தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.
சவுராஷ்டிரா தமிழ்சங்கமம் விழா
இதன் தொடர்ச்சியாக பாளை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா சங்க மாநிலத் தலைவர் அனந்தராமன் தலை மையில் நடைபெற்றது.
இதில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ருஷிகேஷ் பாய்படேல் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு சங்கமம் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து சவுராஷ்ட்டிரா மக்கள் புலம்பெயர்ந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். இங்கு தமிழ் மக்களோடு இணைந்து தமிழக மக்களாகவே மாறி தொழில், கல்வி, வியாபாரம் என அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். மேலும் இங்குள்ள மக்களுக்கு சேவை யாற்றியும் வருகின்றனர். அந்த மக்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு, குஜராத் என அனைத்தும் ஓரே நாடுதான். ஒருவரோடு ஒருவர் நன்கு நட்பு பாராட்ட வேண்டும். இரு மாநிலங்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை இரு மாநிலத்த வர்களும் அறிந்து கொள்ள வேண்டும்்.
தொழில் ரீதியாக, வியாபார ரீதியாக தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே இந்த சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
பாதுகாப்பான மாநிலம்
தமிழ்நாட்டை பொறுத்த வரை அனைத்து மொழி பேசுபவர்களும் வாழ பாதுகாப்பான அமைதியான மாநிலமாகும். இங்குள்ளவர்கள் நட்பை பேணுவதிலும், வரவேற்ப திலும் சிறந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் குஜராத் மாநிலம் மகேஷன் மாவட்ட கலெக்டர் நாகராஜன், சவுராஷ்டிரா பல்கலைக்கழக துணை வேந்தர் க்ரிஷ்பாய்பீமணி, மற்றும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த சவுராஷ்டிரா மக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்