search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தபால் நிலையம் முற்றுகை; கம்யூனிஸ்டு கட்சியினர் 160 பேர் கைது - பரபரப்பு
    X

    தஞ்சை தலைமை தபால் நிலையத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை தபால் நிலையம் முற்றுகை; கம்யூனிஸ்டு கட்சியினர் 160 பேர் கைது - பரபரப்பு

    • ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
    • வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததை மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்று பத்தாண்டு காலம் நடைபெற்று வருகின்ற நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும், ஆண்டு தோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

    விலைவாசி கட்டுப்படுத்தப்படும்.

    நாட்டில் சிறு தொழில்கள் அதிகரிக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கப்படும் என்ற பிரதானமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததை கண்டித்தும், பாரத் மாதா திட்டத்தில் துவாரகா விரைவுச் சாலை திட்டம் உள்பட 7 திட்டங்களில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதை கண்டித்தும்

    தமிழகம் முழுவதும் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

    அதன்படி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக வந்து திரண்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்தராபதி தலைமை தாங்கினார்.

    மூத்த தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரகுமார், வீரமோகன், சேவையா, விஜயலட்சுமி, செல்வகுமார், ராமச்சந்திரன், மாநகர செயலாளர் பிரபாகர், துணைச் செயலாளர் முத்துக்குமரன், பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முகில், விஜய், ஒன்றிய துணைச் செயலாளர் ராமலிங்கம், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் வாசு. இளையராஜா, பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பேராசிரியர் பாஸ்கர், கிருஷ்ணன், கோவிந்தராஜன், ஆசிரியர் சுந்தரமூர்த்தி, கல்யாணி , ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய பா.ஜ.க. அரசே ஆட்சியை விட்டு வெளியேறு என்று கோஷங்கள் எழுப்பியவாறே தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதனை போலீசார் பேரிகார்டு கொண்டு தடுத்தனர்.

    இருந்தாலும் சிலர் பேரிக்கார்டு மீது மேலே ஏறி நின்று கோஷமிட்டனர். தொடர்ந்து தபால் நிலையம் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பெண்கள் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மற்றும் நாளை மறுநாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    Next Story
    ×