search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
    X

    நிகழ்ச்சியில் துணைவேந்தர் திருவள்ளுவன், மாணவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினார்.

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

    • தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் மாணவா் சோ்க்கை தொடங்கியது.
    • கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஆகஸ்ட்-4 ஆம் தேதி வரை நேரில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் மாணவா் சோ்க்கை தொடங்கியது.இப்பல்க லைக்கழகத்தில் உள்ள கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு, கல்வியியல் நிறைஞா் (எம்.எட்.) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2022 - 23 ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கை தொடங்கப்பட்டது. இதில், துணைவேந்தா் திருவள்ளுவன் முதல் விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் பல்கலை க்கழகப் பதிவாளா்(பொ) சி. தியாகராஜன், கல்வியியல் துறைத் தலைவா் கு. சின்னப்பன், பேராசிரியா் சா. ரவிவா்மன்,துணைப் பதிவாளா் கோ. பன்னீா்செ ல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    சோ்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தில் காணலாம். 04362-226720, 227089 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பதிவாளர் தெரிவி த்துள்ளார்.

    Next Story
    ×