என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உரிமம் இன்றி செயல்பட்ட டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்'- 5 பேர் கைது
- போலீசார் சீர்காழி ஈசானியத்தெரு டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.
- பாரினை பூட்டி சீல்வைத்து அங்கு பணியாற்றி வந்த சைஜி என்பவரை கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் உரிமம் இன்றி டாஸ்மாக் அருகே பார்கள் செயல்படுவதாக வந்த புகாரின் பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வாசுதேவன் தலைமையில் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் போலீசார் சீர்காழி ஈசானியத்தெரு டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு உரிமம் இன்றி பார் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பாரினை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் அங்கு விற்பனையில் ஈடுப்பட்டிருந்த மாதானம் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து கடவாசல் டாஸ்மாக் கடையில் உரிமம் இன்றி செயல்பட்ட பாரினை பூட்டி சீல்வைத்து அங்கு பணியாற்றிவந்த புதுத்துறையை சேர்ந்த சைஜி என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் திருமுல்லை வாசல், டாஸ்மார்க் கடையில்பார் நடத்திய சசிகுமார், மாதானம் டாஸ்மாக் கடையில் பார் நடத்திய முத்து கடைக்கண், விநாயக நல்லூரில் டாஸ்மாக் கடையில் பார் நடத்திய பார்த்தராஜ் ஆகிய 5 பே ரை கைது செய்து 5 பார்கள் பூட்டி சீல்வைக்கப்பட்டது.