என் மலர்
உள்ளூர் செய்திகள்
புளியங்குடியில் தமிழர் விடுதலை களம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.
- பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புளியங்குடி:
புளியங்குடியில் தமிழர் விடுதலை களம் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைத்துதரக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புளியங்குடி பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் சாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் சுரேஷ் பாண்டியன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் குமார், ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழர் விடுதலைக் கழக நிறுவனத் தலைவர் ராஜ்குமார்பாண்டியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பச்சேரி கிராமத்தில் வெண்ணிக்காலாடிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றும், வெண்ணிக்காலாடி நினைவு நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகி கடலரசன் நன்றி கூறினார்.