என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுந்தராபுரத்தில் சாலையை கடக்க முடியாமல் தவித்த கன்று குட்டி
- கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வழக்கம் போல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன.
- கூட்டத்தில் இருந்த கன்று குட்டி ஒன்று சாலையை கடக்க முடியாமல் வெகுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது.
குனியமுத்தூர்,
கோவையின் பிரதான சாலைகள் அனைத்திலும் கால்நடைகளும், ஆடுகளும், குதிரைகளும் ஆங்காங்கே சுற்றி வருவதை நாம் அன்றாடம் காண முடிகிறது.
இன்று காலை கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் வழக்கம் போல் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் அதிவேகமாக சென்று கொண்டிருந்தன.
அந்த சமயம் சுந்தராபுரம் பகுதியில் நடுரோட்டில் கால்நடைகள் கூட்டமாக வந்தன. அப்போது அந்த கூட்டத்தில் இருந்த கன்று குட்டி ஒன்று சாலையை கடக்க முடியாமல் வெகுநேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தது. வாகன போக்குவரத்து காரணமாக கன்று குட்டி எங்கு செல்வது என்று தெரியமால் தவித்தது.
சாலையின் வலது புறத்தில் கன்று குட்டியுடன் வந்த கால்நடைகள் கூட்டம் கன்றுகுட்டி வந்து விடும் என காத்திருந்தன. ரோட்டில் வேக வேகமாக சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இதனை கண்டு கொள்ளவில்லை. 1 மணி நேரத்திற்கும் மேலாக கன்று குட்டி சாலையை கடக்க முடியாமல் அங்கேயே நின்றது.
இதனை அந்த வழியாக வந்த சில சமூக ஆர்வலர்கள் பார்த்தனர். உடனடியாக போக்குவரத்தை 1 நிமிடம் நிறுத்தி, அந்தக் கன்று குட்டியை மீட்டு சாலையோரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த கன்று குட்டி, தனது தாயுடன் இணைந்து நடந்து சென்றது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வீட்டில் கட்டி வைத்திருந்தால் இரை போட வேண்டும் என்ற காரணத்திற்காக பெரும்பாலும் ஒரு சிலர் மாடுகளை அவிழ்த்து வெளியே விட்டு விடுகின்றனர். இது மிகவும் கண்டிக்கக் கூடியதாகும். கோவை மாநகராட்சி இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது கோவை மாநகராட்சி இதில் கவனம் கொண்டு செயல்பட்டால், நன்றாக இருக்கும். என்றனர்.