search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    உடன்குடி பள்ளியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய காட்சி.

    எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி யில் 112 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் படி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    உடன்குடி:

    உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி யில் 112 மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, 112 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் ஸ்டாலின், எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சத்தான சத்துணவு திட்டம், காலை சிற்றுண்டி திட்டம், கல்வி உபகரணங்கள் வழங்கல் இப்படி ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். படிக்கின்ற பருவத்தில், மாணவர்களாகிய நீங்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கீழ்படிந்து மிகுந்த கவனத்துடனும், ஓழுக்கத்துடனும் கல்வி கற்க வேண்டும். கல்வி செல்வம் குறைவில்லா செல்வமாகும்.

    தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் படி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீராசிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ், ஜான்பாஸ்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் விங்ஸ்டன் வரவேற்றார். இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், இளைஞரணி ராமஜெயம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதிகள் மதன்ராஜ், ஹீபர், சிராஜூதீன், மகாவிஷ்ணு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஜெசிபொன்ராணி, செல்வகுமார், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள் முகமதுசலீம், அன்வர் சலீம், நிர்வாகிகள் கணேசன், தங்கம், திரவியம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×