search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் பணம் வசூலித்து கொண்டு வந்த கவுன்சிலர்
    X

    பொதுமக்களிடம் வசூலித்த பணத்துடன் வந்து வாக்குவாதம் செய்த கவுன்சிலரை படத்தில் காணலாம்.

    பொதுமக்களிடம் பணம் வசூலித்து கொண்டு வந்த கவுன்சிலர்

    • நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
    • நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் முஸ்தபா. துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதலில் தீர்மானங்கள் வாசிக்க தொடங்கும் முன்பு வார்டு குறைகளை உறுப்பினர்கள் எடுத்து கூறினர்.

    அப்போது 23-வது வார்டு தி.மு.க உறுப்பினர் வேதாச்சலம் ஒரு மஞ்சள் பையுடன் ஆணையாளர் மற்றும் தலைவர் முன்பாக வந்தார். என்னுடைய வார்டுக்கு இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை, பதிலாக நிதி இல்லை என்று கூறுகின்றீர்கள். இதனால் நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தார்.

    அதனை தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி 24-வது வார்டு தி.மு.க உறுப்பினர் மைசூர் மற்றும் 22-வது வார்டு வி.சி.க உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் அவை முன்னால் வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் வேதாச்சலம் 13-வது வார்டு பகுதியில் உள்ள குட்டையை பராமரிப்பு பணியை மேற்கொள்ள அரசு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குட்டையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் குட்டையை வருவாய் துறை மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அடுத்து பேசிய 12-வது வார்டு தி.மு.க உறுப்பினர் அனுராதா சீனிவாசன் கீழ் சின்னாகவுண்டம்பட்டியில் உள்ள மயான நிலத்தை நகராட்சி தேவைக்கு பயன்படுத்திகொள்ள முடிவு செய்து உள்ளதை நான் பொதுமக்கள் சார்பாக ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என்று கூறி ஆணையாளரிடம் மனு வழங்கினார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் 60 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    Next Story
    ×