search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான நிலையில் உள்ள அரசமரத்தை அகற்ற வேண்டும்
    X

    ஆபத்தான நிலையில் உள்ள அரசமரம்.

    ஆபத்தான நிலையில் உள்ள அரசமரத்தை அகற்ற வேண்டும்

    • நள்ளிரவில் பெரிய கிளை முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
    • காற்று அதிகமாக வீசும் நேரத்தில் அந்த பகுதிக்கு செல்ல அச்சமாக உள்ளது.

    திருவையாறு:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கும் அளித்தனர்.

    திருவையாறு தாலுக்கா ராயம்பேட்டை ஊராட்சி ஆக்கினாதபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

    எங்கள் ஊரில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகப்பெரிய அரசமரம் ஊரின் முகப்பு பகுதியில் உள்ளது.

    அந்த மரத்தில் ராட்சத ஈக்களால் ஆன தேன் கூடு 25 உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு நள்ளிரவில் பெரிய கிளை முறிந்து விழுந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் வேறு எந்த பாதிப்பும் இல்லாததால் ஊராட்சி மன்ற தலைவர் மரத்தை வெட்டி அகற்றி கொடுத்து மின்சார ஊழியர்களை அழைத்து கம்பிகளை இணைக்கப்பட்டு மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    ஆனால் மரத்தின் நடுவே பொந்து விழுந்து மோசமான நிலையில் ஆபத்தான நிலையிலும் உள்ளது. மழை பெய்யும் நேரத்திலும், காற்று அதிகமாக வீசும் நேரத்திலும் அந்த பகுதிக்கு செல்ல அச்சமாக உள்ளது.

    கடந்த 6-ம் தேதி இரவு மழை பெய்த போது அரச மரத்தின் ஒரு ராட்சசகிளை உத்தமநல்லூர் செல்லும் சாலை எங்கள் கிராமத்தில் இருந்து வெளியேயும் உள்ளேயும் செல்ல முடியாத அளவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாத போது முறிந்து விழுந்தது.

    இதில் நான்கு போஸ்ட் மரம் உடைந்து மின்கம்பிகள் அறுந்ததில் உயிர் சேதம் ஏதும் ஏற்படாதவாறு கிராம இளைஞர்கள் மின்மாற்றிக்கு சென்று மின்சாரத்தை துண்டித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய பெருந்தலைவர் இணைந்து மரத்தை அகற்றியும் மின்சாரத்தை சரி செய்து கொடுத்தனர்.

    எனவே உயிர் சேதம் ஏதும் ஏற்படும் முன்பு ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரத்தை விரைந்து வெட்ட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே மனுவை திருவை யாறு தொகுதி எம்.எல்.ஏ துரை சந்திரசேகரனிடமும் பொதுமக்கள் அளித்துள்ளனர்.

    Next Story
    ×