search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    X

    கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 9-ந் தேதி நடக்கிறது

    • மக்கள் நீதிமன்றத்தில் முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது.
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் செப்டம்பர் 8 -ந் தேதி வரை சிறப்பு அமர்வுகள் நடைபெறும்.

    கோவை,

    கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வருகிற 9-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.

    இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செப்டம்பர் 9-ந் தேதி (சனிக்கிழமை) கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, குலூர், மதுக்கரை, அன்னூர் நீதி மன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

    இதில், நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள், நிலம் ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன், கல்விக்கடன் தொடர்பான வழக்குகள், விவகாரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சினை வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.

    மக்கள் நீதிமன்றத்தில் முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது.

    எனவே, யாருக்காவது நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் சட்ட ரீதியாக தீர்வுகாணலாம்.

    மேலும், இந்த வழக்குகளுக்குத் தீர்வுகாண்பதற்காக கோவை சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் செப்டம்பர் 8 -ந் தேதி வரை சிறப்பு அமர்வுகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×