என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கடந்த ஆண்டுகளை விட நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளில் பாதியாக குறைந்த நீர் இருப்பு கடந்த ஆண்டுகளை விட நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளில் பாதியாக குறைந்த நீர் இருப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/04/1831303-1damswaterlevel.webp)
பாபநாசம் அணை.
கடந்த ஆண்டுகளை விட நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளில் பாதியாக குறைந்த நீர் இருப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 1100 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
- 2021-ம் ஆண்டு பாபநாசம் அணையில் 94.69 சதவீதம் நீர் இருப்பு இருந்தது
நெல்லை:
நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்க ளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது.
நீர் இருப்பு குறைவு
இதனால் மாவட்டத்தில் உள்ள 1100 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.10 அடியாக உள்ளது. அந்த அணையில் தற்போது 33.57 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இதே நாளில் அந்த அணையில் 115.60 அடி நீர் இருப்பு இருந்தது. அதாவது 70.65 சதவீதம் நீர் இருப்பு காணப்பட்டது. தற்போது அதில் இருந்து பாதியாக நீர் இருப்பு குறைந்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு அந்த அணையில் 94.69 சதவீதம் நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெல் சாகுபடி
இதேபோல் கடந்த ஆண்டு சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 115.71 அடியாக இருந்த நிலையில் தற்போது 77.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதன் சதவீதம் 21.53 ஆகும். 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 88.54 சதவீதம் நீர் இருப்பு இருந்த நிலையில், இந்த ஆண்டு 48.13 சதவீதமாக உள்ளது.
இதேபோல் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர் இருப்பு சதவீதம் பாதியாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் இந்த ஆண்டு நெல் சாகுபடி பணியானது வெகுவாக குறைந்துவிட்டது.