என் மலர்
உள்ளூர் செய்திகள்
புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி
- பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது.
- முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா மூன்று நாட்கள் வெகு விமர்சியாக நடைபெற்றது.
முதல் நாள் மாலையில் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு பிலோமின் தாஸ் முன்னிலையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.
2-வது நாள் குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் காலை, மதியம், மாலை திருப்பலி மற்றும் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது.
இரவு கலை நிகழ்ச்சிகள் வான வேடிக்கை முழங்கிட மணங்கமலும் மலர்கள் மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனே கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய சென்று பின்னர் கோவிலை வந்தடைந்தது.
முன்னதாக பாபநாசம் மேல வீதியில் புனித செபஸ்தியாருக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
3வது நாள் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அமிர்த சாமி முன்னிலையில் திருவிழா திருப்பலி மற்றும் திருப்பலி நடைபெற்றது மாலை கொடி இறக்கம் நடைபெற்றது திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் , இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் அருள் சகோதிரிகள் பங்கு பேரவை அன்பியங்கள் , பங்கு இறை மக்களை, பங்கு கிளை கிராம இறை மக்கள் செய்திருந்தனர்.