என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்25 Feb 2023 2:56 PM IST
- சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர்.
- உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
சேலம்:
சேலம் லைன்மேடு புது திருச்சி கிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 45). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
நேற்று மாலை 6 மணி அளவில், வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1/2 பவுன் தங்க நகைகள், ரூ.5000 ரொக்கம் மற்றும் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அந்தோணியம்மாள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X