என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கல்யாண வைபவம் நடந்தது.
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
- கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பெருமாள்- தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும்.
இக்கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
7-ம் திருநாளின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளான பரிமளரெங்கநாதர் பெருமாள், சுகந்தவனநாயகி தாயார் வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர்.
பெருமாள் தாயாருக்கு காப்பு கட்டி மாலை மாற்றுதல், சிறப்பும் பூரணாகுதி திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு தீபாரதனைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து பெருமாள் தாயார் திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் புறப்பாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக செயலர் ரம்யா, அலுவலர் விக்னேஷ், நகர மன்ற துணை தலைவர் குமார், மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.






