search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமருகல் தனி தாலுகாவாக விரைவில் மாறும்- எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கிராம சபை கூட்டத்தில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருமருகல் தனி தாலுகாவாக விரைவில் மாறும்- எம்.எல்.ஏ. பேச்சு

    • திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது.
    • சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் கொத்த மங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் நேரடியாக கடிதம் எழுதி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கிய 10 கோரிக்கைகளை கேட்டுப் பெற்றுள்ளார்.

    அந்த வகையில் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த 10 கோரிக்கைகளில் முக்கியமாக, திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுகாவாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

    விரைவில் அது நிறைவேற்றப்படும். மேலும், இந்த ஊருக்கு அருகில் உள்ள திட்டச்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.

    இந்த ஊராட்சியிலும் சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. உங்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதில் ஊராட்சி மன்றத் தலைவர் விவேகானந்தன், கிராம சபை மேற்பார்வையாளர் சுப்ரமணியன், திட்டச்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவர் மற்றும் ஆசிரியர்கள், அனந்தநல்லூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர் சக்திவேல், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×