என் மலர்
உள்ளூர் செய்திகள்

தெரு நாய்களால் பொதுமக்கள் கடும் அவதி
- நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- இனப்பெருக்கம் செய்யாத அளவிற்கு கருத்தடை செய்ய வேண்டும்
வந்தவாசி:
வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட காந்தி சாலை,பஜார் சாலை,அச்சரப்பாக்கம் சாலை, சன்னதி தெரு, தெற்கு போலீஸ் நிலையம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக 30-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள் நடந்து செல்லும் போது அவர்களை துரத்துகின்றது. மேலும் இரவு நேரத்தில் பணிகள் முடிந்து வீட்டுக்கு திரும்பும் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாய்களை அச்சத்துடனே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாத அளவிற்கு கருத்தடை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






