search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடவீதியில் சிமெண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
    X

    மாடவீதியில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த காட்சி.

    மாடவீதியில் சிமெண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

    • அமைச்சர் எ.வ. வேலு உத்தரவு
    • இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்

    திருவண்ணாமலை:

    பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செப்டம்பர் மாதத்திற்குள் சிமெண்டு சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் கான்கிரீட் சிமெண்டு சாலை பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளால் பே கோபுர தெரு, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தேரோடும் மாடவீதிகளில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சிமெண்டு சாலை பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சாலை பணிக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    மேலும் சாலை பணிக்காக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதை மீறி சில வாகனங்கள் சென்று வருவதால் அதனை தடை செய்ய அறிவுறுத்தினார்.

    பெரிய தெரு முதல் காந்தி சிலை வரை நடைபெறும் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப்பொறியாளர் ராஜ்குமார், நகராட்சி ஆணையாளர் என்.தட்சணாமூர்த்தி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×