என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவராத்திரியையொட்டி  சிவன் கோவிலில் தூய்மை பணி- தூத்துக்குடி மேயர் உத்தரவு
    X

    நவராத்திரியையொட்டி சிவன் கோவிலில் தூய்மை பணி- தூத்துக்குடி மேயர் உத்தரவு

    • சப்பர பவனி நடைபெறும் பகுதிகளை மேயர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • சிவன் கோவில் பகுதி முழுமையும் தூய்மைப்படுத்தி சீரமைக்க அவர் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரில் நவராத்திரியை முன்னிட்டு அம்பாளின் அருட்சப்பர பேரணி வருகிற 5-ந்தேதி முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு அம்மன் வீதி உலா வரும் சிவன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தூய்மைப்படுத்தி தரும்படி பொது மக்கள், இந்து முன்னணியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், அதிகாரிகளுடன் சப்பர பவனி நடைபெறும் பகுதிகளை மேயர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து சிவன் கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி முழுமையும் தூய்மைப்படுத்தி சீரமைக்க அவர் உத்தரவிட்டார். பொதுமக்களின் கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×