என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வால்பாறை-பொள்ளாச்சி இடையே டிக்கெட் கட்டணம் குறைப்பு
- 10 அரசு பஸ்களில் உடனடியாக அமலுக்கு வந்தது
- விரைவு பஸ்களில் செய்வோர் ரூ.64 செலுத்த வேண்டும்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை போக்குவரத்துக் கழக கிளையில் சுமார் 36 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து சேலம், திருப்பூர், கோவை, பழனி, பொள்ளாச்சி பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு பஸ் கட்டணமாக ரூ.64 வசூலிக்கப்பட்டது. அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்ப டும் நிலையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் வால் பாறை-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வந்த பஸ்களில் 10 பஸ்கள் கடந்த 24-ந் தேதி முதல் சாதரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டன.
இந்த பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து, பயணக் கட்டணமாக ரூ.64க்கு பதிலாக ரூ.48 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விரைவு பஸ்களில் பயணம் செய்வோர் கட்டணமாக ரூ.64 செலுத்த வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.