search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி
    X

    இறந்த ஆடுகளை பொதுமக்கள் பார்வையிட்ட காட்சி.

    மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் பலி

    • அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
    • வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி வனத்துறையினர் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.

    இருப்பினும் முருகன்குட்டை, சங்கத்து வட்டம், மதனாஞ்சேரி ஆகிய பகுதிகளில் இதுவரை சுமார் 50 ஆடுகளை மர்ம விலங்கு கடித்த குதறியது. ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்.

    மதனாஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகைகள் கட்டி வைத்திருந்தார்.

    நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் அங்கேயே பலியானது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தபோது, அந்த வழியாக 4 ஓநாய்கள் போன்ற விலங்குகள் கூட்டமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வனச்சரக அலுவலர் குமார் தலைமையான வனத்துறையினர் விரைந்து சென்று, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுவரை 50 ஆடுகள் பலியாகி உள்ளது. மர்ம விலங்கு பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    பொதுமக்கள் கூறியபடி, தொடர்ந்து ஆடுகளை கடித்துக் குதறும் மர்ம விலங்கு, ஓநாயாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். சிறுத்தை போன்ற விலங்குகள் ஆடுகளை கடித்த உடன் வனப் பகுதிக்குள் சென்று விடும். ஆனால் ஓநாய் போன்ற விளக்குகள் கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியிலேயே பதுங்கி இருந்து, நள்ளிரவு நேரங்களில் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை.

    எனவே மதனாஞ்சேரியை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஓநாய் போன்ற மர்ம விலங்குகள் பதுங்கி உள்ளதாக என வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×