search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடகள போட்டியில் தங்கம் வென்ற வாலிபர்
    X

    இந்தியா அளவில் தங்க பதக்கம் வென்ற விஷாலுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.

    தடகள போட்டியில் தங்கம் வென்ற வாலிபர்

    • 200 மீட்டர் ஓட்டத்தில் சாதனை
    • குஜராத்தில் தேசிய அளவிலான போட்டி நடந்தது.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த வாலிபருக்கு பிகே ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த தென்னரசு சாம்ராஜ் என்பவரின் மகன் விஷால் கடந்த 3ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இதனால் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த விஷால் என்பரை பலரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டையில் விளையாட்டு பிரிவில் தேசிய, மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ள பிகே ஸ்போர்ட்ஸ் சார்பில் கோடைகால இலவச பயிற்சி முகாம் நடைபெற்று நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர் விஷாலுக்கு பாராட்டு விழா நடத்தினார்.

    நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயிற்சி மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார்.

    நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், உடற்கல்வி ஆசிரியர் மதன்குமார், ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பயிற்சி மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×