search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள்
    X

    திருப்பத்தூர் மாவட்ட திமுக உட்கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் விருப்ப மனுக்களை நிர்வாகிகள் பெற்ற போது எடுத்த படம்.

    தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள்

    • விண்ணப்பங்களை தேர்தல் ஆணையர் சிவ.ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கான உட் கட்சி தேர்தலுக்கான விருப்பமனுக்கள் பெறப்பட்டது.

    திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில், வாணியம்பாடி சசிபிரியா மஹாலில் நடைபெற்ற வேலூர் மேற்கு (திருப்பத்தூர்) மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களை வழங்குதல் மற்றும் விருப்பமனு பெறும் நிகழ்ச்சியில் கழக உட்கட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சியினரிடம் விருப்பமனுக்களை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் ஆணையர் சிவ. ஜெயராஜ் பெற்றுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை, செங்கம் மு.பெ.கிரி, திருப்பத்தூர் அ.நல்லதம்பி எம்.எல்.ஏ, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் கே.பி.ஆர்.ஜோதிராஜன், ஆ.சம்பத்குமார், மாவட்டப் பொருளாளர் டி.ரகுநாத், தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.சதாசிவம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே. பிரபாகரன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், பிறஅணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.

    Next Story
    ×