search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலமாக்களுக்கு இலவச சைக்கிள்
    X

    உலமாக்களுக்கு இலவச சைக்கிள்

    • 300 பேர் பயனடைந்தனர்
    • அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி (ஜோலார்பேட்டை) நல்லதம்பி(திருப்பத்தூர்), ஏ.சி. வில்வநாதன்(ஆம்பூர்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டு உலமாக்களுக்கு சைக்கிள்கள், திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா, விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் இடுப்பொருட்கள் உட்பட 713 பயனாளிகளுக்கு 7 கோடியே 15 லட்சத்து 58 ஆயிரத்து 760 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், 300 உலமாக்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ்.சாரதி குமார், மாவட்ட கூட்டுறவு பால்வளத் தலைவர் எஸ். ராஜேந்திரன், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி, பேரூராட்சி செயலாளர்கள் ஆ. செல்வராஜ், ஸ்ரீதர், இஸ்லாமிய பெண்கள் கல்லூரி செயலாளர் சுனா கைசர் அஹமத், பல்வேறு துறை அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா நன்றி கூறினார்.

    Next Story
    ×