என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![9-ம் வகுப்பு மாணவி தற்கொலை குறித்து பள்ளியில் விசாரணை 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை குறித்து பள்ளியில் விசாரணை](https://media.maalaimalar.com/h-upload/2023/09/14/1949999--.webp)
9-ம் வகுப்பு மாணவி தற்கொலை குறித்து பள்ளியில் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி நேரு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் துப்புரவு ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் பிருந்தா (வயது 14). அதேப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி வழக்கம் போல் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்தார். வீட்டின் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 'மாணவி பிருந்தா பள்ளி சீருடையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளார். வீட்டிற்கு வரும்போது அவர் கவலையோடு வந்துள்ளார். வீட்டில் மாணவிக்கு எந்த பிரச்சினையும் ஏற்பட வில்லை.
வீட்டுக்கு வந்ததும் பெற்றோரிடம் பிருந்தா சகஜமாக பேசி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி தற்கொலை குறித்து போலீசார் அவர் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பள்ளியில் ஏதாவது மன உளைச்சல் ஏற்படும் அளவிற்கு சம்பவம் நடந்ததா? அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.