search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கியவர் கைது
    X

    ஓடும் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கியவர் கைது

    • போலீசார் விசாரணை
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று முன்தினம் முன்பதிவு செய்யப்பட்ட ஏ.சி. பெட்டியில் பி.விஜூ (வயது 45) என்பவர் டிக்கெட் பரிசோதக ராக பணியில் இருந்தார்.

    ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து வந்த போது அந்த பெட்டியில் கதவு அருகில் நின்றிருந்த ஒருவரிடம், டிக்கெட் பரி சோதகர் விஜூ, என்ன டிக்கெட் வைத்துள்ளார் என்று சோதனை செய்தபோது அவர் பொது பெட்டியில் பயணம் செய் வதற்கான டிக்கெட் வைத்திருப்பது தெரிய வந்தது.

    இதனால் அபராதம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார். இதில் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டு அந்த நபர், டிக்கெட் பரிசோதகரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    பின்னர் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்தபோது ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோரிடம் தாக்கிய நபரை ஒப்படைத்து புகார் அளித்தார்.

    அதன்பேரில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் விழுப்புரம் மாவட்டம் சொம்ம னாபுரம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (49) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×