என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒட்டப்பட்டி ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட பூமி பூஜை போட்ட போது எடுத்த படம்.
திருப்பத்தூர் ஒட்டப்பட்டி ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம்
- ரூ.7.30 கோடியில் கட்டப்படுகிறது
- பூமி பூஜை நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.7கோடி 30லட்சம் செலவில் கட்டும் பணியை பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது. ஜோலார்பேட்டை ஒன்றியம், ஓட்டப்பட்டி ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அவசர மருத்துவ தேவைகள் மற்றும் சிகிச்சைக்கு அரு காமையில் உள்ள புதுப் பேட்டைக்கு சென்றுவரும் நிலை இருந்து வருகிறது. அதே பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
இதனை ஓட்டி தமிழக அரசு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.7 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை ஒட்டப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காந்தி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன் சிலர் கவிதா தண்டபாணி, ஒன்றிய குழு துணை தலைவர் ஸ்ரீதேவி காந்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் புகழேந்தி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






