search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழுதடைந்த கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு
    X

    பாச்சல் பகுதியில் பழுதடைந்த கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    பழுதடைந்த கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு

    • சாலை அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டார்
    • பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்து விசாரித்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சியில் உள்ள பல்வேறு பணிகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியான இதயநகரில் நடைபெற்றுவரும் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்தார்.

    இதனை அடுத்து பாச்சல் டிவி ஸ்டேஷன் பகுதியில் பழுதடைந்துள்ள பயணியர் நிழற்க்கூடத்தை அகற்றி புதிய நிழல் கூடம் அமைக்க வேண்டும் எனவும் புளியாங்கொட்டை பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள அங்கன்வாடிமையம் கட்டிடத்தை அகற்றி புதிய அங்கன்வாடிமையம் அமைக்க வேண்டும் என பாச்சல் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா திருப்பதி, துணைத்தலைவர் சஞ்சீவி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

    அதன் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், உதவி செயற்பொறியாளர் சேகர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பழுதடைந்த கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

    மேலும் புளியாங்கொட்டை பகுதியில் உள்ள பொதுமக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தும் வகையில் ஏரிக்கரையின் மீது புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்து சாலை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை வைத்ததின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் புளியாங்கொட்டை ஏரிக்கரையில் சாலை அமைப்பதற்கான பணி குறித்து ஆய்வு செய்தார்.

    இதனை அடுத்து ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகளையும், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    Next Story
    ×