என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி.
மளிகை, ஓட்டல், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பார்சம்பேட்டை, சந்தைக்கோடியூர் பகுதியில் கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் வேலூர் ஒருங்கிணைந்த நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) வி. செந்தில் குமார், நாட்றம்பள்ளி ஜோலார்பேட்டை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் எம். பழனிசாமி ஆகியோர் கோடியூர், பார்சம்பேட்டை பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், ஹோட்டல்கள், இறைச்சி கடைகள் என 16 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது காலாவதியான 3 கிலோ உணவை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு ஹோட்டல்களில் கலர் பவுடர்கள் பாக்ஸ்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருளை பறிமுதல் செய்து அந்த கடை உரிமையாளருக்கு 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் கோடியூர் பகுதியில் இறைச்சி கடை ஒன்றில் பழைய இறைச்சி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ சிக்கன் இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
உணவகம் மற்றும் இறைச்சி கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் பழைய உணவு மற்றும் இறைச்சிகளை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு அறிவு றுத்தினர். உணவு பாதுகாப்பு சான்று இல்லாத கடைகள் நடத்துபவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொண்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும் மேலும் கடை பதிவு சான்று இல்லாமல் உள்ளவர்கள் உடனடியாக பதிவு சான்று பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.