என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- ரூ.74 கோடியில் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பனைகளை துவக்கி வைக்கும் விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரவேற்று பேசினார். சிறப்பு திட்ட செயலாக்கதுறை செயலாளர் டாக்டர் டேரேஸ் அஹமத், எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, டி.எம்.கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.74 கோடியில் மதிப்பில் ரூ.14,253 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்று 26 மாதங்கள் ஆகிறது. இதில் 260க்கும் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இங்கு ரூ.74 கோடியில் 14253 பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் லட்சியம். அதற்கு முன்மதியாகத்தான் இங்கு அனைத்து தரப்பினரும் வந்துள்ளதை பார்க்கும் போது தெரிகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் திட்டம் செல்ல வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டு அரசு செயல்படுகிறது.
அரசு பஸ்சில் மகளிர் கட்டணமின்றி செல்ல வேண்டும் என்று திட்ட மூ லம் 310 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இத்திட்டததில் 2.65 கோடி மகளிர் பயன் அடைந்துள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தில் தமிழகத்தில் 2லட்சம் மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 1800 மாணவிகளுக்கு இத்திட்டன் மூலம் மாதம் தோறும் ரூ.1000 அவரது வங்கி கணக்கில் செல்கிறது.காலை சிற்றுண்டி திட்டத்தில் தமிழகத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது. இத்திட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 175 பேர் பயன் அடைள்ளனர். இன்னூயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திடட்த்தில் 1100 பேர் பயன் அடைந்துள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 63400 பேர் பயன் அடைந்துள்ளனர்.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 2508 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்ப ட்டுள்து. திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.56 கோடியிலும், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 24 கோடியிலும், வாணியம்பாடி அரசு ஆஸ்பத்தியில் ரூ.23.65 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
விளையாட்டு அரங்கம்
வாணியம்பாடி தொகுதியில் ரூ.3 கோடியில் சிறுவிளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மாவட்ட விளையாட்டு அரங்கம் ரூ.15 கோடியில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாட்டறம்பள்ளி அருகே தொழிற்பேட்டை அமைக்க தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும்.தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பார்த்து ஒன்றியத்தின் மற்ற மாநிலங்களில் செய ல்படுத்தப்படு வருகிறது.
இதன்மூலம் தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்