என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரணி டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
- வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு
- திருட்டை தடுக்க கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்த அறிவுறுத்தல்
ஆரணி:
ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ளதுணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலூர் சரகடி.ஐ.ஜி.முத்துசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆரணி சரகத்துக்கு உட்பட்ட ஆரணி டவுன், ஆரணி தாலுகா, களம்பூர், சந்தவாசல், கண்ண மங்கலம், ஆரணி மகளிர் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வழக்கு களை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஆரணி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆரணி காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அனைத்து வியாபாரி களையும் அழைத்து பொதுவான ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த காவல் துறை முடிவு செய்யும், மேலும் பைக் திருட்டு குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.
அப்போது ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந் திரன் உடன் இருந்தார்.