என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் 10 பவுன் நகை கொள்ளை
    X

    மூதாட்டியிடம் 10 பவுன் நகை கொள்ளை

    • முயல் வாங்குவதாக கூறி மோசடி
    • பெண்ணுக்கு வலைவீச்சு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா கீழ்அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் வியாசியாமேரி (வயது 78). இவருடன் அவரது மகள் மற்றும் மருமகன் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் வீட்டின் மாடியில் முயல் வளர்த்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சுமார் 4 மணியளவில் வியாசியாமேரி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது மொபட்டில் அவரது வீட்டிற்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து உள்ளார். அந்த பெண் மூதாட்டியிடம் முயல் வாங்குவது போன்று பேச்சு கொடுத்து உள்ளார்.

    இதையடுத்து மூதாட்டி வீட்டின் கதவில் தாழ்பாள் போட்டு அந்த பெண்ணை மாடிக்கு அழைத்து சென்று அவர்கள் வளர்த்து வரும் முயலை காண்பித்தார். பின்னர் அந்த பெண் முயலை வாங்கினார். மூதாட்டியிடம் முயலை எடுத்து செல்ல கோணிப்பையை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு கீழே சென்றார்.

    10 பவுன் நகை கொள்ளை

    இதை நம்பி மூதாட்டி மாடியிலேயே இருந்தார். பின்னர் அந்த இளம்பெண் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றார்.

    நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால் மாடியில் இருந்து மூதாட்டி கீழே வந்தார். அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளை யடிக்கப்ப ட்டது தெரியவந்தது.

    இது குறித்து திருவண்ணா மலை தாலுகா போலீசா ருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×