search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று ரம்ஜான் பண்டிகை; தஞ்சையில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
    X

    இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    இன்று ரம்ஜான் பண்டிகை; தஞ்சையில், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

    • பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
    • இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், சிறுவர்- சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது.

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

    அதன்படி நேற்று பிறை தெரிந்ததை முன்னிட்டு இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு தஞ்சை மாநகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபம் முன்பு (உருது ஸ்கூல் திடல்) இன்று காலை ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாநகர கிளை தலைவர் அப்துல்லா, செயலாளர் ஜியாவூதீன், பொருளாளர் சலீம், நிர்வாகிகள் முகமது முஸ்தபா, காலித், செய்யது முஸ்தபா, மாவட்ட மாணவரணி செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் கிளை இமாம் மாவட்ட பேச்சாளர் சேக் அப்துல் காதர், ரமலான் மாதம் நோன்பு குறித்தும், பண்டிகையின் நோக்கம் குறித்தும் பேசினார்.

    இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெ ண்கள், சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    முடிவில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    இதேப்போல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி வாசல்கள், திறந்தவெளி இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    Next Story
    ×