search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    X

    ஜேடர்பாளையம் அண்ணா பூங்காவிற்கு செல்ல முடியாதபடி தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

    ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    • ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்ற–வும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • இதையடுத்து கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை மூலம், ரூ.20 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியை சுற்றுலாத் தளமாக மாற்ற–வும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பொதுப்பணித்துறை மூலம், ரூ.20 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு, சிமெண்ட் இருக்கை, மான், முயல், ஒட்டக்கச்சிவிங்கி போன்ற ஆளுயர சிமெண்ட் சிலைகள், புல்வெளிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளையாடக்கூடிய சீசா போன்றவையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில், ஏராளமானோர் வந்து, பொழுதை குதூகலமாக கழித்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு கருதி ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.

    இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதாலும், காவிரில் தற்போது நீர்வரத்து குறைந்து இருப்பதாலும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பூங்கா திறக்கப்பட்டு இருக்கும் என ஆர்வமாக வந்த, சுற்றுலா பயணிகள் பூங்கா திறக்கபடாததால் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனர்.

    Next Story
    ×