search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டவுனில் தொண்டர் சன்னதி கோவில்  சுற்று சுவர் தூய்மைப்படுத்தப்பட்டது- மாநகராட்சிக்கு பொதுமக்கள் நன்றி
    X

    கோவிலை சுற்றி தூய்மை பணி நடைபெற்ற காட்சி.

    டவுனில் தொண்டர் சன்னதி கோவில் சுற்று சுவர் தூய்மைப்படுத்தப்பட்டது- மாநகராட்சிக்கு பொதுமக்கள் நன்றி

    • நெல்லை டவுன் பகுதியில் தொண்டர் சன்னதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
    • இந்த கோவிலின் சுற்றுப்புற சுவர் பகுதியை ஒட்டி வண்டிப்பேட்டை தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் கோவில் சுற்று சுவரில் பெரும்பாலானோர் சிறுநீர் கழிக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பகுதியில் தொண்டர் சன்னதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த கோவிலின் சுற்றுப்புற சுவர் பகுதியை ஒட்டி வண்டிப்பேட்டை தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில் கோவில் சுற்று சுவரில் பெரும்பாலானோர் சிறுநீர் கழிக்கின்றனர் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு அந்த பகுதியில் மது பாட்டில்களை வீசி எறிவது உள்ளிட்ட விரும்பத் தகாத நிகழ்வுகள் அங்கு அதிகமாக நடக்கின்றன என்றும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது.

    இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஆலய சுற்றுசுவர் பகுதியை சுத்தப்படுத்தி அங்கு கிடந்த மது பாட்டில்களை அகற்றினர்.

    மேலும் அங்கு யாரும் சிறுநீர் கழிக்காதவாறு கிருமி நாசினி தெளித்து ப்ளீச்சிங் பவுடர் தூவினர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு அந்த பகுதிகள் வசிக்கும் இந்து அமைப்பினர் மற்றும் அனைத்து பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

    இரவு நேரங்களில் அந்த தெருவில் செல்ல முடியாத நிலைை இருந்ததாகவும், தற்போது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையால் நிம்மதியாக செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்களது ஏற்பாட்டில் ஆலயத்தின் சுற்றுப்புற சுவர்களில் சுவாமி ஓவியங்கள் வரைவதற்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×