search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் வாரச்சந்தையில் கடை போட இடமில்லாமல் வியாபாரிகள் அவதி
    X

    பரமத்திவேலூர் வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்படாததால் பழைய இடத்திலேயே வியாபாரிகள் கடை அமைத்துள்ள காட்சி. 

    பரமத்திவேலூர் வாரச்சந்தையில் கடை போட இடமில்லாமல் வியாபாரிகள் அவதி

    • நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.
    • வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். தற்போது காங்கிரீட் தளம் மற்றும் மேற்கூரை அமைக்க ரூ. 1 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

    அதனால் வார சந்தை தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே மாற்றப்படும் என டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்தது. ஆனால் நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.

    வாரசந்தையில் பணிகள் நடைபெற்று வருவதால், பாதிக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் பில்லர் அமைக்க 10-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.

    இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அறியாமல் பள்ளத்தில் விழும் வாய்ப்புள்ளது. வாரச்சந்தை மாற்றும் முடிவில் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாரச்சந்தை பழைய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு, வியாபாரிகளுக்கும் கழிப்பிட வசதி முதற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில வியாபாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து இதே பகுதியில் கடை போட்டு வருகின்றனர். வரும் நாட்களில் வார சந்தை பழைய பஸ் நிலையம் அருகே கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படும் என கூறினார்.

    Next Story
    ×