என் மலர்
உள்ளூர் செய்திகள்
காற்றாலை விசிறி இறக்கை கொண்டு சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
- சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.
- இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பரமத்திவேலூர்:
சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரு பகுதியில் இருந்து மதுரை பகுதிக்கு சுமார் 400 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை மிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போலீஸ் செக் போஸ்ட் எதிரே உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தது.
இந்த இறக்கை கொண்டு செல்லும் லாரியை எந்த வாகனமும் முந்தி செல்ல முடியாத சூழ்நிலையில் அனைத்து வாகனங்களும் பின்தொடர்ந்து சென்றன. இதனால் நீண்ட நேரம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எனவே இறக்கைகளை கொண்டு செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.