என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டம் நடைபெற்றதை படத்தில் காணலாம்.
வாசுதேவநல்லூர் யூனியனில் சமூக தணிக்கை தொடர்பான பயிற்சி கூட்டம்
- வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு சமூக தணிக்கை தொடர்பான பயிற்சி கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு சமூக தணிக்கை தொடர்பான பயிற்சி கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் கருத்தப்பாண்டியன், உதவியாளர் சிலம்பரசன், ஓவர்சீஸ் ராமசாமி, அலுவலர்கள், பணியாளர்கள், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story






