என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி பேரூராட்சியில் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் எந்திரத்தின் சோதனை ஓட்டம்
- கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் ஊழியர்கள் இதுநாள்வரை கைகளிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர்.
- கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நவீன எந்திரம் வாங்கப்பட்டது
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்க்காக பொது கட்டண கழிப்பிடங்கள் இயங்கி வந்தன.
இந்த கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் ஊழியர்கள் இதுநாள்வரை கைகளிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வந்தனர். பொது கழிப்பிடங்களை ஊழியர்கள் கைகளில் சுத்தம் செய்வதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பு எதிர்ப்பு காட்டி வந்தது.
கழிப்பிடங்களை சுத்தம் செய்ய ஊழியர்களுக்கு நவீன கருவிகளை வழங்க வேண்டி கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் மக்கள் அதிகாரம் சார்பில் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டு வந்தது. இந்த மனுவை பரிசோதித்த செயல் அலுவலர் நீண்ட நாள் முயற்சிக்கு பிறகு கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நவீன எந்திரம் வாங்கப்பட்டது. இந்த எந்திரத்தின் சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த எந்திரம் எந்த அளவு தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்கிறது என்பதையறிந்து தேவைக்கேற்றார் போல் மேலும் சில எந்திரங்களை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் என ெசயல் அலுவலர் தெரிவித்தார்.