என் மலர்
உள்ளூர் செய்திகள்

துறையூர் நகராட்சி பள்ளிக்கு காவிரி குடிநீர் திட்டம் - நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
- துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் பணியாள–ர்களுக்கு சீருடை வழங்குவது, உள்ளிட்ட 40 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
திருச்சி
துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், நகராட்சி மேலாளர் முருகராஜ், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து துறையூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காவிரி குடிநீர் மற்றும் சுற்றுசுவர் ரூபாய் 10 லட்சம் செலவில் அமைப்பது, சாமிநாதன் காய்கறி மார்க்கெட்டில் ரூபாய் 3 லட்சம் செலவில் கழிவறைகள் மராமத்து செய்வது, நகராட்சி மருத்துவமனைக்கு ரூபாய் 5 லட்சம் செலவில் குடிநீர் வசதி செய்து தருவது, காமராஜ் நகரில் பழுதடைந்துள்ள தார் சாலைகளை ரூபாய் 6 லட்சத்திற்கு புதுப்பிப்பது,
பொது சுகாதார பிரிவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடை வழங்குவது, உள்ளிட்ட 40 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், இளையராஜா, அம்மன் பாபு, சுமதி மதியழகன், முத்து மாங்கனி பிரபு, பாலமுருகவேல், கௌதமி கருணாகரன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






